search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "கேலக்ஸி பட்ஸ்"

    சாம்சங் நிறுவனம் புதிய கேலக்ஸி எஸ்10 சீரிஸ் ஸ்மார்ட்போன்களுடன் கேலக்ஸி பட்ஸ் என்ற பெயரில் வயர்லெஸ் இயர்பட்களை அறிமுகம் செய்துள்ளது. #GalaxyBuds



    சாம்சங் நிறுவனத்தின் கேலக்ஸி பட்ஸ் வயர்லெஸ் இயர்பட்ஸ் கேலக்ஸி அன்பேக்டு விழாவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. கேலக்ஸி எஸ்10 சீரிஸ் மற்றும் கேலக்ஸி ஃபோல்டு மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போன்களுடன் புதிய வயர்லெஸ் பட்ஸ்-ம் அறிமுகமாகி இருக்கிறது.

    புதிய கேலக்ஸி பட்ஸ் இயர்போன்கள் அடுத்த தலைமுறை வயர்லெஸ் இயர்பட்ஸ் மாடலாக இருக்கிறது. இது 2016 ஆம் ஆண்டு சாம்சங் அறிமுகம் செய்த கியர் ஐகான் எக்ஸ் மாடலின் மேம்பட்ட மாடலாக அறிமுகமாகி இருக்கிறது. இது முந்தைய மாடலை விட 30 சதவிகிதம் சிறியதாக உருவாக்கப்பட்டுள்ளது.



    சாம்சங் கேலக்ஸி பட்ஸ் ஆப்பிளின் ஏர்பாட்ஸ் போன்று சார்ஜிங் கேசுடன் வருகிறது. இது சாம்சங்கின் பவர்ஷேர் அம்சத்துடன் வருகிறது. இதனால் இயர்பட்களை புதிய கேலக்ஸி எஸ்10 ஸ்மார்ட்போனை கொண்டே சார்ஜ் செய்ய முடியும். கேலக்ஸி பட்ஸ் இயர்போன்கள் ஏ.கே.ஜி. மூலம் டியூன் செய்யப்பட்டிருக்கிறது. மேலும் இதில் பிக்ஸ்பி வாய்ஸ் அசிஸ்டண்ட் வசதியும் வழங்கப்படுகிறது.

    ஏ.கே.ஜி. தவிர புதிய கேலக்ஸி பட்ஸ் இயர்போனில் மேம்பட்ட ஆம்பியண்ட் சவுண்ட் வழங்கப்பட்டிருக்கிறது. இது பயனரின் சுற்றுப்புறத்தில் இருக்கும் ஒலியை தேவைப்படும் சூழலில் மட்டும் கேட்க வழி செய்யும். இத்துடன் அடாப்டிவ் டூயல் மைக்ரோபோன் தொழில்நுட்பமும் வழங்கப்பட்டுள்ளது. இதனால் பயனர்கள் எவ்வித சூழல்களில் பேசும் போதும், மறுமுனையில் இருப்போருக்கு மிக தெளிவாக கேட்கும். 

    சாம்சங் கேலக்ஸி பட்ஸ் ப்ளூடூத் 5.0 கனெக்டிவிட்டி கொண்டிருக்கிறது. இதில் 58 எம்.ஏ.ஹெச். பேட்டரி வழங்கப்பட்டுள்ளது. இதனை ஒருமுறை சார்ஜ் செய்தால் அதிகபட்சம் 6 மணி நேரத்திற்கு தொடர்ச்சியாக பயன்படுத்த முடியும். இதன் சார்ஜிங் கேசில் 252 எம்.ஏ.ஹெச். பேட்டரி வழங்கப்பட்டுள்ளது. இந்த கேஸ் 15 நிமிடங்களுக்கு சார்ஜ் செய்தால் 1.7 மணி நேரம் பயன்படுத்தலாம். 



    சார்ஜிங் கேஸ் யு.எஸ்.பி. டைப்-சி கனெக்டிவிட்டி கொண்டிருக்கிறது. ஆண்ட்ராய்டு 5.0 அல்லது அதற்கும் அதிக வெர்ஷன்களை கொண்டு இயங்கும் ஆண்ட்ராய்டு சாதனங்களில் கேலக்ஸி கேலக்ஸி பட்ஸ் பயன்படுத்தலாம். 

    புதிய கேலக்ஸி பட்ஸ் விலை 129 டாலர்கள் (இந்திய மதிப்பில் ரூ.9,200) என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இது தேர்வு செய்யப்பட்ட சந்தைகளில் மட்டும் மார்ச் 8 ஆம் தேதி முதல் விற்பனை செய்யப்படுகிறது. கேலக்ஸி பட்ஸ் கருப்பு, வெள்ளை மற்றும் மஞ்சள் என மூன்று வித நிறங்களில் கிடைக்கிறது.
    சாம்சங் நிறுவனத்தின் கேலக்ஸி பட்ஸ், கேலக்ஸி ஃபிட் சாதனங்களுக்கு ப்ளூடூத் சான்றளிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. #Samsung #Smartwatch



    சாம்சங் நிறுவனத்தின் கேலக்ஸி வாட்ச் மற்றும் கேலக்ஸி ஃபிட் சாதனங்கள் கடந்த ஆண்டு கேலக்ஸி நோட் 9 ஸ்மார்ட்போனுடன் அறிமுகம் செய்யப்பட்டது. இந்நிலையில், சாம்சங் நிறுவனம் தனது அடுத்த தலைமுறை ஃபிட்னஸ் சாதனங்களை அறிமுகம் செய்ய இருக்கிறது.

    அடுத்த தலைமுறை கேலக்ஸி ஃபிட் சாதனம் கேலக்ஸி எஸ்10 சீரிஸ் ஸ்மார்ட்போன்களுடன் பிப்ரவரி 20 ஆம் தேதி நடைபெற இருக்கும் விழாவில் அறிமுகம் செய்யப்பட இருக்கிறது. சாம்சங் அன்பேக்டு விழாவில் அந்நிறுவனம் கியர் ஐகான் எக்ஸ் (2018) மாடலின் மேம்பட்ட வெர்ஷனாக கேலக்ஸி பட்ஸ் சாதனமும் அறிமுகமாகலாம்.

    கேலக்ஸி பட்ஸ் வயர்லெஸ் இயர்போன்கள் ப்ளூடூத் எஸ்.ஐ.ஜி. வலைதளத்தில் பட்டியலிடப்பட்டுள்ளது. இந்த சாதனம் SM-R170 என்ற மாடல் நம்பர் கொண்டிருக்கிறது. மேலும் இந்த சாதனத்தில் ப்ளூடூத் 5.0 வசதி வழங்கப்படுகிறது. முந்தைய கேலக்ஸி ஐகான் எக்ஸ் (2018) மாடலில் ப்ளூடூத் 4.2 கனெக்டிவிட்டி வசதி வழங்கப்பட்டிருந்தது.



    இதுதவிர புதிய இயர்போனில் 4 ஜி.பி. ரேம், 8 ஜி.பி. மெமரி வழங்கப்படுகிறது. முந்தைய கியர் ஐகான் எக்ஸ் (2018) மாடலை போன்றே புதிய கேலக்ஸி பட்ஸ் இயர்போனிலும் புதிய ஃபிட்னஸ் டிராக்கிங் அம்சங்களை கொண்டிருக்கும் என கூறப்படுகிறது. 

    கேலக்ஸி ஃபிட் சாதனத்தின் அம்சங்கள் சாம்மொபைல் வலைதளம் மூலம் வெளியாகியுள்ளது. அதன்படி கேலக்ஸி ஃபிட் சாதனம் SM-R370 மற்றும் SM-R375 மாடல் நம்பர்களை கொண்டிருக்கிறது. இருசாதனங்களிலும் ப்ளூடூத் 5.0 வசதி வழங்கப்படுகிறது. மேலும் இவை கேலக்ஸி ஃபிட் என்ற பெயர் கொண்டிருக்கிறது.

    புதிய சாதனத்தில் இசிம் வசதி வழங்கப்படலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. இம்முறை சாம்சங் நிறுவனம் ஐந்து கேலக்ஸி எஸ்10 மாடல்களை அறிமுகம் செய்ய இருக்கிறது. இவற்றில் 5ஜி வேரியன்ட் மற்றும் மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போனும் அடங்கும். இவற்றுடன் கேலக்ஸி ஸ்போர்ட் ஸ்மார்ட்வாட்ச் சாதனத்தை அறி்முகம் செய்யலாம் என கூறப்படுகிறது.
    ×